Sunday, October 10, 2010

சாதனைகள் படைக்கவென அவதரித்த கிரிக்கெட் வீரர்


கிரிக்கெட் வரலாற்றில் எல்லோரும் வியக்கும் அள்விற்கு பல சாதனைகளை குவித்துகொண்டு செல்லும் சாதனை வீரராக சச்சின் காணப்படுகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களை கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சினை சாரும்.

சச்சின் இதுவரை 171 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49 சதங்களையும், 57 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு இதுவரை 14002 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டமாக 248 ஓட்டங்களை பெற்றமை குறப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியில் 56.22 சராசரி வைத்துள்ள சச்சின், ஒரு நாள் போட்டியில் 45.12 சராசரி வைத்துள்ளார்.

ஐ.சி .சி விருது வழங்கு விழா ஒக்டோபர் 6 ஆம் திகதி பெங்களூரில் நடந்தது. இதில் 2010 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் மற்றும் மக்களின் மனம் கவர்ந்த வீரர் ஆகிய இரண்டு விருதுகளை பெற்றார் சச்சின். இந்த விருதுகளை பெற முக்கிய காரணம் பயிற்சியாளர் கிறிஸ்டன்"என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ் மேன் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2009, ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் 2010, ஆகஸ்ட் 10ஆம் திகதி வரையிலான காலம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஐ.சி.சி விருதுக்கான காலக் கட்டத்தில், சச்சின் 10 டெஸ்ட் போட்டிகளில் 1064 ஓட்டங்கள் (81.84 சராசரி) எடுத்துள்ளார். 17 ஒரு நாள் போட்டிகளில் 914 ஓட்டங்கள் (65.28 சராசரி) எடுத்துள்ளார். சச்சினின் இத்தகைய சிறந்த ஆட்டத்திற்காக ஐ.சி.சி. ஆண்டின்( 2009 -2010) சிறந்த வீரருக்கான விருதை முதல் முறையாக கைப்பற்றினார்.






Thursday, September 23, 2010

பெண்களுக்காக டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகள்


பெண்களுக்காக டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு நேற்றைய தினம் 40 வருடம் நிறைவு ஆண்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் பெண்களுக்கான டென்னிஸ் போட்டிகளுக்கு 7,500 டொலர்கள் செலவாகியுள்ளது.அதன் பின்னர் 2009 ஆண்டு 85 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டது.

பெண்களுகான டெனிஸ் போட்டியில் தடம் பதித்தவர்களின் வரிசையில் வீனஸ் வில்லியம்,செரினா வில்லியம்ஸ், மார்டினா நவ்ராட்டிலோவா, மரியா ஷெரபோவா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

1970 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பெண்களுக்கான டென்னிஸ் போட்டியில் ரோஸ்மெரி கிளாசா,நன்சி மெல்வெலி,பார்கோவிஸ் கிஸ்டி,ஜூடி டெல்வோன்,ஜூடி ஹெல்மந்த் ஆகியோர் முதல் போட்டிகளில் பங்குகொண்டனர்.

1973 ஆம் ஆண்டு விம்பில்டன் டென்னிஸ் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு விம்பில்டன் டெனிஸ் போட்டியில் 250 டெனிஸ் வீராங்கனைகள் உலகம் முழுவதிலுமிருந்து கலந்துகொண்டனர்.

Monday, August 30, 2010

6 அடி 9 அங்குலம் உயரத்தை உடைய சிறுமி


எனது உயரமே எனக்கு சாதமான சூழலை ஏற்படுத்தியுள்ளதாக பிரேலிலை சேர்ந்த 14 வயது சிறுமியான எலிசனி சில்வா கூறுகிறார்.

பிரேசில் நாட்டைசேர்ந்த 14 வயது சிறுமியான எலிசனி சில்வா 6 அடி 9 அங்குலம் உயரத்தை கொண்டவர் ஆவார்.

அரவது உயரமே அவருக்கு சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது.அவர் பாடசாலை செல்லும் போது பஸ்களில் கூட பயணிக்க முடியாதவராக காணப்படுகிறார்.

தனக்கு மாடலிங்கில் தான் விருப்பம் என்றும் அவர் கூறுகிறார்.

பிலேமில் இடம்பெற்ற மண்பெண் அலங்கார மாடலிங் போட்டியில் அவர் கலந்துகொள்ளவுள்ளதாக பிரேஸில் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகில் மிக உயரமான சிறுமியாக மார்வடெனி அண்டசன் காணப்படுகிறார்.அவர் 6 அடி 11 அங்குலம் உயரத்தை கொண்டவராவர். ___ E-mail to a friend

கிரிக்கெட்டில் தற்பெருமை கூடாது':முரளிதரன்


இலங்கையின் கிரிக்கெட் வரலாற்று சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.



முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்தமையை கௌரவிக்கும் முகமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு 800 எண் பதித்த டிசேர்ட்டை முரளிதரனுக்கு பரிசளித்தார்கள். வீரர் வி.பி.சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பத்ரிநாத், பாலாஜி, அஸ்வின், ஜகாதி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு முரளிதரனை வாழ்த்தினார்கள்.



இந்த விழாவில் கலந்துகொண்ட முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்:



பல சோதனைகளை கடந்த நான் இந்த சாதனையை மேற்கொண்டேன்.கிரிக்கெட் எனக்கு புகழை தந்தது. கடினமாக உழைத்தால் கிரிக்கெட்டில் சாதிக்கலாம். கிரிக்கெட்டில் தற்பெருமை கூடாது' எனது சாதனையை தகர்க்க ஹர்பஜன்சிங்குக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.



அனில் கும்ளே எனது சிறந்த நண்பர் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

Sunday, August 29, 2010

மோனலிசா ஒவியத்தின் புன்னகையின் இரசியம் அறியப்பட்டுள்ளது


உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனலிசா ஒவியத்தின் மயக்கும் புன்னகைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து விட்டனர். மோனலிசா ஓவியத்தில் காணப்படும் புன்னகை உலக மக்களை இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது.



மோனலிசா ஓவியத்தை நேரே பார்க்கும் போது அது புன்னகை செய்வதாக எமக்கு தென்படுவதில்லை, ஆனால் ஒரு பக்கத்தில் இருந்து அந்த ஓவியத்தை உற்று நோக்கினால் பார்ப்பவரை நோக்கி மோனலிசா புன்னகைப்பதாகத் தெரியும்.



இந்தத் தோற்றத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், டாவின்சி எந்த வகையான நுணுக்கத்தைக் கையாண்டு இந்த ஓவியத்தை வரைந்திருப்பார் என்பதைக் கண்டறிய முடியவில்லை.


மோனலிசா ஓவியத்தின் மீது 'எக்ஸ்ரே' கதிர்கள் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டதில் சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. டாவின்சி காலத்தில் மூன்று விதமான அடிப்படையில் ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளதாகவும் அவற்றில் ஒன்றான 'புமாட்டோ', முறையைப் பயன்படுத்தியே டாவின்சி, மோனலிசாவின் புன்னகையை உருவாக்கியுள்ளார் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



மேலும் மோனலிசாவின் இதழ்களின் மீது பல்வேறு வர்ணங்களை 40 அடுக்குகளாகப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்னகை இருக்கும் இடத்தில் மட்டும் டாவின்சி, தூரிகையைப் பயன்படுத்தாமல் தன் கைவிரல்களைப் பயன்படுத்தியுள்ளதும் 'எக்ஸ்ரே' ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Saturday, August 28, 2010

'யூ டியூபில் இணையத்தள தியட்டர்' சேவை ஆரம்பம்


உலக மக்களை காணொளி வலைப்பின்னல் மூலம் கவர்ந்த இணையத்தள சேவையான 'யூ டியூப் யூகே'(YouTube UK )'யூ டியூப் தியேட்டர் ' என்ற சேவையை ஆரம்பித்துள்ளது.


இதில் 400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போதைய புதிய ஒப்பந்தங்களுக்கு அமைவாக பல திரைப்படங்களை யூ டியூப் இல் வெளியிடும் உரிமையினை கூகிள் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் ஹொலிவூட்,பொலிவூட் மற்றும் காட்டூன்களை இலவசமாக பார்வையிடலாம்.

Thursday, August 26, 2010

மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் உலக அன்னை


கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை திரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.


இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.


அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை , அவரது மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.


இவர், அல்போனியாபின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார்.அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.


ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மதபோதனைலில் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.


1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் எடுத்துக்கொண்டார் கன்னிகாஸ்திரியானார் . மதபிரசாரகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தெரேசா எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது அரபணிக்காக தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மஷெனரி ஒப் சரிட்டி இல்லம் ஸ்தாஅபிக்கப்பட்டு தீய்மையான பணிக்கு எடுத்துக்காட்டாக நீல நிறகரை உடைய வெள்ளை கைத்தரி சேலையை அணிந்தார்.


அன்னையிடம் முதன் முறையாக தீட்சை பெற்ற சுபாஷினிக்கு தனது இயர்பெயரை சூட்டினார். இவரது பணிக்கு 1980 ஆம் ஆண்டு பிரிடிஷ் மகாரானியாரின் கையால் கௌரவ விருதும் வழங்கப்பட்டது.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து பிளிக் கிளிண்டனின் கையால் கௌரவ பிரஜாவுரிமைய வழங்கினார்.


வேல்ஸ் இளவரளி டயானாபின் மரணத்தை கண்டு மனம் வருந்தினார். 1997 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அவர் உயிர் நீத்தார். அவரது மரணத்தின் பின்னர் சகோதரி நிர்மலா என்பவர் மஷெனரி ஒப் சரிட்டி சேவை இல்லத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


என்னை எம்மை விட்டு மரைந்தாலும் எம் மனங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

Wednesday, August 25, 2010

சூரியனை ஒத்த புதிய கோள் கண்டுபிடிப்பு


சூரியனை ஒத்த கோளை சுற்றிவருவதும் ஏழு கோள்களை உள்ளடக்கியதுமான புதிய கோள் தொகுதியொன்று பூமியிலிருந்து 127 ஒளி வருட தூரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.



இதுவரை சூரியனுக்கு அப்பால் கண்டுப்பிடிக்கப்பட்ட கோள் தொகுதிகளில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்படுகிறது.



ஆறு வருட ஆராய்ச்சியின் பின்னரே தாம் இதனை கண்டுபிடித்ததாக விஞ்ஞானி டாக்டர் கிரிஸ்ரோபெ லோவுஸ் தெரிவிக்கின்றார்.



இந்தக் கோள் தொகுதியின் பிரதான நட்சத்திரம் HD 10180 என அழைக்கப்படுகிறது.



இதைப் போன்ற ஒரு கோள்தொகுதி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இதன் மூலம் கோள்கள் தொடர்பான ஆய்வுகளில் தாம் புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாகவும் டாக்டர் கிரிஸ்ரோபெ லோவுஸ் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த நட்சத்திரம் HARPS எனப்படும் கோள்களை இனங்காணும் கருவியினூடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்(காணொளி இணைப்பு) _

சந்திரன் படிபடியாக சுருங்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வு கடந்த 100 கோடி ஆண்டுகளாகவோ, அதற்கு மேலும் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பிறகு இந்த முடிவு மேற்கொண்டதாகவும் அங்குள்ள சிறிய எரிமலைகள், மற்றும் செங்குத்தான குன்றுகள் மற்றும் பாறைகளாலும் இது போன்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


சந்திரன் குளிர்ச்சி அடையும் போது அதன் மேற்பரப்பு பல மைல் நீளத்துக்கு சுருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் அளவு சிறிதாகி கொண்டே வருகிறது.





Tuesday, August 17, 2010

இலங்கை வீரர் மன்னிப்பு கேட்டதாக செவாக் டுவிட்டரில் தெரிவிப்பு


நேற்றைய போட்டியில் சதம் நழுவவிட்ட சேவாக் தனது 'டுவிட்டர்' கணக்கில், "இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரண்தீவ் எனது அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்" என சற்று முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று தம்புள்ளையில் நடைபெற்ற போட்டியில் ஷேவாக்கின் நேர்த்தியான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.

இருப்பினும் அவரது சதம் கைநழுவிச் சென்றது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாகும். அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது, அவரது சதத்திற்கும் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.

அந்த பந்தை அவர் அடிக்க முற்பட்ட வேளை அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால், அதன் மூலம் 'எக்ஸ்ட்ரா' வகையில் ஒரு ஓட்டம் கிடைத்ததால் இந்திய அணி இலக்கை எட்டியது. இதனால் ஷேவாக்கின் சதம் வாய்ப்பும் நழுவிப்போனது இங்கு குறிடத்தகக்தாகும். , , ,

Friday, July 2, 2010

IE - 8 ஐப் பாவிக்குமாறு மைக்ரோசொப்ட் ஆலோசனை


மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது இணையத்தள பிரவுஸர் தொகுப்பான ஐஇ8 (Internet Explorer IE8) இற்கு பாவனையாளர்களை மாற்றுமாறு ஆலோசனை வழங்கி வருகிறது.

வீடு மற்றும் அலுவலக இணையத்தள பாவனையாளர்களில் அனேகர் இன்னமும் IE6 பிரவுஸர் தொகுப்பினையே பாவித்து வருவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

IE6 பிரவுஸரை பாவிப்பதன் காரணமாக பல பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. இதனால் இன்டர்நெட் கணக்குகள் அத்துமீறி 'ஹெக்கிங்' செய்யப்பட்டது, தகவல்கள் திருடப்பட்டன சீனாவும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இதன் விளைவால் கூகுள் உட்பட 20 நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அவுஸ்திரேலியா கிளை தலைமை அதிகாரி ஸ்டுவட் ஸ்ரத்டீ (Stuart Strathdee) கருத்து தெரிவிக்கையில்,

" IE6 பிரவுஸர் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டு 9 வருடங்களாகிவிட்டன. இதன் காலம் முடிவடைந்து விட்டது . இன்டர்நெட் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாம் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றோம்" என்கின்றார்.

.IE6 பிரவுஸரில் security patches எனப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. ஆனால் IE8 பிரவுஸர் தொகுப்பு சிறந்த இணைய பாதுகாப்பினை வழங்குகிறது.

2010 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், 25 சதவீதமானோர் IE8 பிரவுஸரையே பாவிப்பதாகவும்,18 சதவீதமானோர் IE6 பிரவுஸரைப் பாவிப்பதாகவும் , 13 சதவீதமானோர் IE7 பாவிப்பதாகவும் குறிப்பிடுகின்றன என நெட் மர்க்கட் ஷெயார் தெரிவிக்கின்றது

Wednesday, June 30, 2010

'கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்


உலகில் பிரபல்யமான தேடு இணையத்தளமான கூகுள் இணையத்தளம், 'கூகுள் மீ' (Google Me) என்ற சமூக இணையத்தளம் ஒன்றை இரகசியமாக உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சமூக இணையத்தள கண்டுபிடிப்புக்களில் பிரபலம்பெற்ற எடம் டி ஏஞ்சலோ (Adam D'Angelo) கருத்து தெரிவிக்கையில், நம்ப தகுந்த வட்டாரங்களில் கிடைக்கப் பெற்ற உண்மையான தகவல் இது எனத் தெரிவித்துள்ளார்..

டுவீட்டர் இணையத்தளத்தைப் போன்று 'கூகுள் பஸ்' (Google Buzz) என்ற இணையத்தளம் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த கூகுள் பஸ் (Google Buzz) ஊடாக ஜீமெயில் மின்னஞ்சலை பாவிக்கும் ஒருவர், தனக்கு தேவையான புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்..

கூகுள் நிறுவனமானது ஏற்கனவே ஒர்கியூட் ( Orkut) என்ற சமூக இணையத்தளத்தையும் உருவாக்கி இருந்தது. இது 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஒர்கியூட் ( Orkut) இணையத்தளம் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் பிரபல்யம் பெற்றது. ஆனால் இது ஒரு சாதாரண காரியமல்ல எனவும் இது ஒரு சவால்மிக்க பீடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Tuesday, June 29, 2010

தமிழில் இணையத்தள முகவரி : முதல் தடவையாக இலங்கை சாதனை!

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.



இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்

Niroshini

Monday, June 21, 2010

எகிப்தில் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகர் கண்டுபிடிப்பு _


கிப்தின் வெளிநாட்டவர் குடியிருப்புப் பகுதி எனக் கருதப்படும் 3500 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலைநகரம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராடாரைப் பயன்படுத்தியே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள்ளது.

கிறிஸ்துவுக்கு முன் 1664 - 1569 ஆண்டுக் காலப்பகுதியில், ஹைக்சொஸ் ஆட்சியின் கீழ் இருந்த வடக்கு டெல்டா பகுதியில் ஆசியாவிலிருந்து வறுமைப்பட்டு வந்தோர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆய்வை மேற்கொண்ட, அவுஸ்திரேலிய வானியலாளரான ஐரின் முல்லர் தலைமையிலான குழுவினர் கூறுகையில், தலைநகர் எத்தனை ஆழத்தின் அடியில் புதையுண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே எமது நோக்கம் என்கின்றனர்.

டெல்-அல்-டபா நகரின் வீடுகள், வீதிகள் , கோயில்கள், பச்சைப் பசேல் நிலங்கள், நவீன நகரம் போன்றவை ராடாரில் பதிவாகியுள்ளன.

ஆஸி. ஆய்வாளர்கள் குழு 1975 ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

'ஐ கேன் ஹேஸ் சீஸ்பர்கர்' இணையத்தளம்

உலகின் முடிசூடா மன்னனாக 'ஐ கேன் ஹேஸ் சீஸ்பர்கர்' இணையத்தளம் மாறியுள்ளது. 53 இணையத்தளங்கள் இதனுடன் ஒன்றிணைந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


இது 'பென் ஹஹ்(Ben Huh ) 32' என்ற முயற்சியாளருக்குச் சொந்தமானது. உலகை வலம் வரும் விசித்திரமான இணையத்தளங்களில் நாள் ஒன்றுக்கு 16 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ள ஒரே தளம் இதுதான்



இதற்கு ஒரு விசித்திரமான கதை உள்ளது .


'பென் ஹஹ்' (Ben Huh ) தனது பதிவேற்றத்தில் பூனைகளின் படங்களை 'ஐ கேன் ஹேஸ் சீஸ்பர்கரி' ல் தரவேற்றம் செய்துள்ளார். உடனடியாகப் பல இணையத்தள பாவனையாளர்கள் அவரது பதிவலையில் இணைந்து கொண்டதைக் கண்டதும் திகைத்துப் போய்விட்டார் அவர்.


உடனே, தனது முயற்சியாண்மையின் பேரில் 10,000 டொலர்கள் தனது சொந்த வைப்பு பணத்தை கொண்டு இரண்டு ஹவாக்கியர்களிடம் இணையத்தளங்களை வாங்கியுள்ளார்.

சீச்ஸ்பர்கர் Cheezburger என்ற தந்து நிறுவனத்தில் தற்பொழுது 40 ஊழியர்கள் காணப்படுவதாக பென் ஹியூச் தெரிவித்துள்ளார்.சீச்ஸ்பர்கர் Cheezburger நிறுவன நிதி கணகாய்வாளர் டுட் சுவாக்கி (Todd Sawicki) கருத்து தெரிவிக்கையில் சீச்ஸ்பர்கர்" Cheezburger இணையதளத்தில் பூனைகளின் உருவபட அட்டைகளுடன் 5 புத்தகங்கள் வெளியிடப்பட்டதாகவும் மேலும் டிசேட்டுகளும் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்த்துள்ளார்.



இந்த இணையத்தளத்திற்கு Cheezburger நாள் ஒன்றுக்கு 18,000 பதிபாளர்கள் இணைவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெறுமனே ஒரு வலைபதிவாக ஆரம்பிக்க ஐ கேன் ஹெஷ் சீச்ஸ்பர்கர் . ( I Can Has Cheezburger ) வலைப்பதிவும் இன்று சிறந்த இணையத்தளமாக மாறியுள்ளது.இது சிறந்த முயற்சியாண்மைக்கு உதாரணமாகும்.

Wednesday, June 16, 2010

உலகை ஸ்தம்பிக்க வைத்துள்ள ஆப்கானிஸ்தான் கனிமப் புதையல்

உலகையே இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ள விஷயம் ஆப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா வின் முயற்சியால் கண்டறியப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் 'ஸ்மெல் பண்ணவர்கள்' அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான்.

இந்தக் கனிமங்கள் தவிர, தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுக்களையும் பேரளவில் கண்டுபிடித்துள்ளனர்.இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மதத் தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப்பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படுகை கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கூட ஆப்கன் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் எங்கேயோ போய்விட்டிருக்கும்.'இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. உலகின் மிகப் பெரிய சுரங்க மையமாக இனி ஆப்கானிஸ்தான் திகழும்' என்கிறார் ஒரு அதிகாரி. லித்தியம் கனிமத்துக்கு ஒட்டுமொத்த இருப்பிடமாகத் திகழும் அளவுக்கு ஆப்கானிஸ்தானி்ல் இருப்பு காணப்படுகிறதாம்.

இப்போது லித்தியம் உற்பத்தியில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது. அதை ஜஸ்ட் லைக் தட் ஓவர்டேக் செய்துவிடும் ஆப்கானிஸ்தான் என்கிறார்கள்.

ஆனால் இந்த கனிமங்களை தோண்டி எடுக்க பெரும் முதலீடு அவசியமாக உள்ளது. தேவையான முதலீடு கிடைத்தால், அடுத்த சில வருடங்களிலேயே ஆப்கன் நாடு உலகின் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் அதிசயத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள் என்கிறது அமெரிக்கா.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மத்திய பாதுகாப்பு கமாண்டர் ஜெனரல் டேவிட் எச் பெட்ரோஸ் இதுகுறித்து கூறுகையில், "ஆப்கானிஸ்தானில் இப்போது கண்டறிந்துள்ள தாதுக்களின் அளவு, வெரைட்டி, தரம் என்னை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. ஆனால் இதைத் தோண்டி எடுப்பது, பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் புரியாமலில்லை. ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷம் பெரிய விஷயம்.

மாபெரும் தொழிற்சாலைகள் அமைந்து, ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் தருணம் நெருங்கிவிட்டதால், ஆப்கானிஸ்தான் பற்றிய இமேஜே சட்டென்று மாறும் என்றார்.

இந்த கனிமப் புதையலில் மதிப்பு என்ன?:

அதைத் தெரிந்து கொள்ளும் முன், ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் எவ்வளவு என்று பார்க்கலாம்.இந்த நாட்டின் பொருளாதாரம் பெருமளவு சார்ந்திருப்பது... விவசாயத்தையோ, தொழிற்சாலைகளையோ அல்ல. ஓப்பியம் மற்றும் அபின் தயாரிப்பை!

சர்வதேச அளஷவில் கொடிய போதைப் பொருள்கள் அனைத்துக்கும் தாயகமாகத் திகழ்கிறது ஆப்கானிஸ்தான். மேற்கு ஆசியாவின் போதை மருந்து முக்கோணத்தின் மையப் பகுதி ஆப்கானிஸ்தான். இன்று நேற்றல்ல...பண்டைய காலத்திலிருந்தே ஓப்பியம் தயாரிப்பது ஆப்கானிஸ்தானில் குடிசைத் தொழில் மாதிரி.இதற்கடுத்த வருவாய் ஆதாரம், முன்பு ரஷ்ய உதவி.

இப்போது அமெரிக்கா தரும் நிதியுதவி.இப்படி சகல வழிகளிலும் ஆப்கானிஸ்தானின் மொத்த வருவாய் அளவே 12 பில்லியன்கள்தான்! அதாவது இந்த 12 பில்லியன் டொலர்தான் ஆப்கானிஸ்தானின் ஜிடிபி (gross domestic production!). ஒரு சர்வதேச நடுத்தர ஐ.டி. நிறுவனத்தின் லாபத்தின் அளவும் இதுதான்.

ஆனால், கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிமத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலரைத் தாண்டும் என்கிறது ஆரம்பகட்ட கணக்கு. பில்லியன் கணக்கில் சொன்னால் 1000 பில்லியன் டொலர்கள். இவ்வளவு பெரிய புதையலை எப்படிப் பயன்படுத்தப் போகிறது ஆப்கானிஸ்தான் என்பதுதான் இப்போது எழுந்துள்ள 'பில்லியன் டொலர் கேள்வி'!. அல்லது இதை அமெரிக்கா எப்படி மறைமுகமாக சுருட்டப் போகிறது என்பது தான் 'ட்ரில்லியன் டொலர் கேள்வி!'.

ஆப்கானிஸ்தானில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. மீண்டும் தலிபான்கள் தலைதூக்கும் நிலை. நாட்டின் ஒரு பகுதியில் இன்னும் தலிபான்களின் ஆதிக்கம் உள்ளது. இன்னொரு பக்கம் லஞ்சமும் நிர்வாகச் சீர்கேடும் ஆப்கானிஸ்தானையே விழுங்கிவிடும் சூழல் உள்ளது.

இந்த கனிமத் தாதின் ஒரு சிறு பகுதியை வெற்றிகரமாக வெளியில் எடுத்துப் பயன்படுத்தினாலே, நாடு பெருமளவு நிமிர்ந்துவிட வாய்ப்புள்ள நிலையில், இயற்கை அளித்துள்ள இந்த நற்கொடையை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ? என கவலை தெரிவித்துள்ளனர் பொருளியலறிஞர்கள்.இந்த தாது விஷயத்தில் அமெரிக்கா எப்படியெல்லாம் ஆப்கானிஸ்தானில் விளையாடப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக நிற்கிறது.

ஆனால் இந்த விஷயத்தில் அமெரிக்காவும் பயப்படும் சமாச்சாரம் ஒன்று அங்கே நிகழ்ந்து வருகிறது. அதுதான் சீனாவின் எதிர்பாராத தலையீடு. இந்த இயற்கைத் தாது புதையல் விஷயத்தில் உதவிக்கு வருகிறோம் என வரிந்து கொண்டு சீனா நுழைய ஆரம்பித்துவிட்டதை அச்சத்துடனே பார்க்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள். ஆப்கானிஸ்தானில் தாமிர தாது தோண்டியெடுக்கும் முழு உரிமையையும் சீனாவுக்கு தாரைவார்க்க ஆப்கன் அமைச்சர் ஒருவரே 30 மில்லியன் டொலர்கள் லஞ்சம் பெற்றுள்ளார். இன்னும் அவர் அமைச்சராகவே தொடர்வதும் அதை அதிபர் அமீத் கர்ஸாய் அனுமதிப்பதும், அமெரிக்கர்கள் பயத்தை அதிகரித்துள்ளது.ஆனால், பெரும்பகுதி கனிமங்களை கண்டுபிடித்ததே அமெரிக்காதான் என்பதால் முன்னுரிமை அவர்களுக்கே தரப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த கனிமங்கள் மீது ஆசைப் பார்வை பார்ப்பதைப் பார்த்தால், 'தேனெடுத்தவன் புறங்கையை நக்கிய கதையாகுமா அல்லது தேனையே எடுத்துக் கொண்டு வெறும் புறங்கையை மட்டும் ஆப்கன் மக்களுக்கு காட்டப் போகிறார்களா என்பது தெரியவில்லை.கடந்த ஓரிரு வாரங்களில் தான் இந்த ஆப்கான் கனிம சமாச்சாரத்தை வெளியில் கசிய விட்டுள்ளது அமெரிக்கா.

'Unobtanium' என்ற கற்பனையான கனிமத்தை எடுக்க பண்டோரா கிரகத்தையே அமெரிக்கப் படைகள் ஆக்கிரமித்து, அதன் மக்களை ஒழித்துக் கட்டும் கற்பனைக் கதையைத் தான் 'அவ்தார்' என்ற படமாக எடுத்தார் ஜேம்ஸ் கேமரூன். 3 டி சமாச்சாரம், அன்னிய கிரகவாசிகள் என்று கதை போனதால் கேமரூன் சொல்ல வந்த விஷயம் (கதையின் கரு ) பெரிதாகப் பேசப்படவில்லை.

இப்போது ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கனிம வளம் கிட்டத்தட்ட பண்டோரா கிரக கதை மாதிரி ஆகிவிடுமோ என்ற அச்சம் இப்போதே பரவ ஆரம்பித்துவிட்டது.

டுவிட்டரில் தகவல் தந்துவிட்டு ஒருவர் தற்கொலை : தென் கொரியாவில் சம்பவம்


டுவிட்டர் இணையத்தளத்தில் தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர். தென் கொரியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த லீ-கே-ஹவா எனும் 27 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இவர் டுவிட்டர் ஊடாக தகவல் ஒன்றைத் தரவேற்றம் செய்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்த இவர், பின்னர் தலைமறைவாகியுள்ளார்.

இவர் காணாமல் போனதாக இவரது குடும்பத்தார் முறைப்பாடு செய்துள்ளனர். லீ மரணித்த விடயம் டுவிட்டர் பாவனையாளர்கள் மூலம் அனைவருக்கும் விரைவாகத் தெரிய வந்தது.

அவரது தொடர்பாளர்கள் லீயின் மரணச் செய்திக்கான தம் அனுதாபங்களை அதிர்ச்சி மேலிட தெரிவித்த வண்ணமுள்ளனர்.

டுவிட்டர் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத் தன்னை ஒருவர் மாய்த்துக் கொண்ட சம்பவம் இதுவே முதல் தடவையாக நிகழ்ந்துள்ளதாக இணையத்தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tuesday, June 15, 2010

இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்



இருதய நோய்களுக்கா பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகள் புற்றுநோயை ஏற்படுத்த வழிவகுப்பதாக ஏ.ஆர்.பி எனப்படும் (angiotensin-receptor blockers ) ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இருதய நோய்களுக்காக சிகிச்சை பெற்ற 105 நோயாளர்கள் புற்றுநோய்க்கு இலக்காகி உள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், 9 தடவை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இது விவரம்அறியப்பட்டுள்ளது என்கின்றனர்.

இந்த மருந்து வகைகளை முழுமையாக உட்கொள்ள வேண்டாம் என நாம் மக்களை அறிவுறுத்தவில்லை. வைத்திய ஆலோசனைக்கமைய உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என ஷெஃபீல்ட் பல்கலைகழக (University of Sheffield ) ஆய்வாளர் டாக்டர் டிம் சிக்கோ தெரிவித்துள்ளார்.

சில மருந்து வகைகளைப் பயன்படுத்தும் போது, இரத்த அழுத்தம் அதிகரிப்பதனால அது புற்று நோய்க்கு வழிவகுப்பதாக அமைகிறது.

2003 ஆம் ஆண்டு 68,000 பேரிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதற்கான உரிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites