Sunday, December 20, 2009

மலையகச் சிறார்களுக்காக எழுதப்படும் மரண சாசனங்கள்!


எமது நாட்டின் முதுகெலும்பை நிமிர்த்த தமது முதுகெலும்பை வளைத்துக் கொண்டவர்கள் மலையகத் தொழிலாளர்கள். தேயிலையின் பசளை தொழிலாளியின் வியர்வை எனும் கூற்று அவர்களின் உழைப்புக்கு நல்லதொரு சான்றாகும்.

இந்த நிலையிலும் தமது பிள்ளைகள் வாழ்வில் உயர வேண்டும் என்ற உறுதியான போக்கு அவர்களை இடைவிடாது உழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதற்கு தடையாகக் காணப்படுவது அவர்களின் வறுமை. தமது பிள்ளைகளின் படிப்பை இடையில் நிறுத்தி வறுமை எனும் கொடிய அரக்கனுக்கு அவர்களைப் பலியிடும் நிலை மலையகத்தில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

மலையகச் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்படவேண்டும், தமது பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதை பெற்றோர் நிறுத்த வேண்டும் என்ற பல கோஷங்கள் விழிப்புணர்வுடன் எழுப்பப்பட்ட போதிலும் இது சாத்தியமாகாத ஒரு விடயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் குடைசாயும் மலையகச் சிறுவர்களின் எண்ணிக்கை, சமுதாயம் சார்ந்தவர்களை விழிப்புணர்வூட்டியதாகவும் தெரியவில்லை.

ஜீவா, சுமதி ஆகியோரின் துயரமான சம்பவங்களின் ஈரம் எமது நெஞ்சில் ஆறாத நிலையில், இப்பொழுது மற்றுமொரு 15 வயது சிறுமி குமுதினியின் துயரமிக்க சம்பவம் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

தெல்தோட்ட லூல்கந்துர தோட்டத்தைச் சேர்ந்த ராமையா, மாரியாயி ஆகியோரின் அன்பு மகள் சிறுமி குமுதினி. இவர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி மர்மமான முறையில் மரணமானார்.

தெல்தோட்ட மத்திய கல்லூரியில் 8 ஆம் தரத்தில் படித்துவிட்டுத் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக, அடிமை சேவகம் செய்ய புறப்பட்ட தனக்கு இவ்வாறான செயல் நிகழும் என அவள் அறிந்திருக்கவில்லை.

தரகர்களின் தவறான செயல்கள்

மலையகப் பகுதிகளில் இவ்வாறு வேலைக்கமர்த்துவதற்குச் சிறுவர்களை அவ்வப்பகுதியிலிருந்து அழைத்துச் செல்லும் தரகர்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்று.. தரகர் ஒருவர் மூலம் ஹேவாஹெட்ட முல்லேரிய தோட்ட அதிகாரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நாளிலிருந்தே குமுதினியின் அவலநிலை தொடர ஆரம்பித்துவிட்டது.

தனது மகள் தூக்கிட்டுக் கொண்டாள் என்ற அதிர்ச்சியான செய்தியைக் கடந்த 10 ஆம் திகதி, ஒரு மர்மமான குரலே ராமையாவுக்குத் தெரியப்படுத்தியது. அந்தச் செய்தி அவளது பெற்றோரின் நெஞ்சை பிளக்கச் செய்தது.

ஒரு வீட்டில் வேலை செய்துவந்தவள் இறுதியில் தூக்கிட்டுக் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்?

மனித நேயமற்ற சிலரின் செயற்பாட்டால், அந்தப் பிஞ்சு மனதின் கனவுகளும் ஆசைகளும் ஒரு நொடியில் சிதைந்துபோயின. இவ்வாறாக பலி கொள்ளப்படும் உயிர்கள் இன்னும் எத்தனை... எத்தனை...?

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார நிலையே இவை போன்ற சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது. வறுமைச் சூழல் அவர்களைச் சூழ்ந்து கொண்ட போதிலும் வளமான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் ஏற்படாமலில்லை. மலையக சமூகம் ஏன் அதை நாடிச் சென்று பெற்றுக் கொள்ள முயலவில்லை? இதனாலேயே மலையக சிறுமிகள் மட்டுமன்றி முதியவர்கள், நடுத்தரவயதினர் கூட வேலைக்கு அமர்த்தப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது.

கொத்தடிமைகள் அல்லர் மலையகச் சிறுவர்கள் கொத்தடிமைகளாகவே என்றும் இருக்க பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கென ஓர் எதிர்காலம் நிச்சயமாக உள்ளது என்பதை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகம் சார்ந்த விடயங்களும் கூட காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகவும் அரச சார்பற்ற அமைப்புக்களூடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. என்றாலும் பெற்றோரின் அசமந்தத்தால் அது செயலிழந்து போகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் வேளை, அவை தொடர்பாக முழுமையான விசாரணைகளைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டிய கடப்பாடு பாதுகாப்பு தரப்பினருக்கே உள்ளது.

குமுதினியைப் போன்று கறுகிப் போய்விடாது, மலையக சிறுவர்களின் வாழ்வை மீட்டுத் தர கல்வியாளர்கள், பாதுகாப்புத் துறையினர் ஆகியோருடன் பாதுகாப்புச் சட்டங்களும் உறுதுணை புரிய வேண்டும்.

எதிர்காலத்தில் இது நிழல் ஆகுமா? அல்லது நிஜமாகுமா?

-நிரோ

Friday, December 18, 2009

நான் படித்து சுவைத்தது- பிள்கேட்ஸின் 10,000 மணி நேரம்



பிள்கேட்ஸின் வெற்றிக்கு அவர் பிறந்த காலக்கட்டமும் காரணம்
ஒரு விதை பாரிய விருட்சமாக வளர அதற்கு தேவையான மண், சூரிய ஒளி, கிடைக்கபெறவேண்டும் அதே சமயத்தில் மனிதனோ, மிருகமோ அதை சேதப்படுத்தாது பாதுகாக்கப்படவேண்டும்.



Outliers: The Story of Success by Malcolm Gladwell குறிப்பிட்ட சில விடயங்கள் பிள்கேட்ஸ் மைக்ரோசொப்ட் நிறுவனத்தை உருவாக்கி அது இன்று ஒரு பாரிய உறுதியான நிறுவமனாக காணப்படுகிறது.அதற்கு காரணம் அவரது 10,000 மணி நேரமும் அவர் பிறந்த காலக்கட்டமும் ஆகும்.



பிள்கேட்சின் இந்த வளர்ச்சியின் ஆரம்பம் அவர் பிறந்த கால கட்டம் காரணமாக உள்ளதாக மாக்லம் கிளாட் வேல் The Story of Success இல்குறிப்பிட்டுள்ளார்
பிள்கெட்ஸ் 1955 ஆம் ஆண்டு பிறந்தார்.1974 ஆம் ஆண்டு அல்டெய் என்ற மைக்ரோ கம்பியூட்டர் அறிமுகமனது அபோது பள்ளியில் கல்வி கற்ற பிள்கேட்ஸுக்கு கம்பியூற்றர் புரோகிராம்களை (Computer Programme) எழுத பழக அதிக வாய்ப்பு இருந்தது..மாறாக அவர் 1945 பிறந்திருந்தால் அவருக்கு சாதிக்க இந்த வாய்ப்பு கிடைக்த்திருக்காது என கூறவருகிறார்.

Malcolm Gladwell அதற்காக பிள்கேட்ஸை குறைவாக மதிப்பிடவில்லை .இதேபோல் எண்ணற்ற சாதனையாளர்களின் பத்தாயிரம் மணி நேர இரகசியத்தை கூறுகிறார் மாக்லம் கிளாட்வெல் இவர் கூறிய இந்த பத்தாயிரம் மணிநேரம் சூட்மம எல்லோரும் பின்பற்ற வேண்டியது ஒன்று.

பெண்களுக்கிடையிலான சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?


பெண்கள் ஆண்களை விட தம்மை வெகு குறைவாகவே மதிப்பிடுகிறார்கள். சமூகத்தில் பெண்கள் தாம் இரண்டாம் நிலையிலேயே இருப்பதாகத் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் பெண்களின் சக்தி பலம் வாய்ந்தது என்பதை, ஏனோ அவர்கள் மறந்து விடுவதுதான் வேதனைக்குரியது. ஆண்களை சவலாகப் பெண்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் பெண்களின் சவால்களை ஆண்களால் எதிர்கொள்ள முடியுமா?


சமூகத்தில் பெண்களை விட ஆண்களே சக்திவாய்ந்தவர்கள் என்பது சமூகத்தின் கருத்து. அப்படியானால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை அவர்கள் எதிர்கொள்வார்களா? அல்லது எதிர்கொள்ளத்தான் ஆண்களால் முடியுமா?
ஆண்கள் உடல், மன வலிமையில் சிறந்து விளங்குபவர்களாக இருக்கலாம். வாழ்க்கையில் சவால்கள் என்று வரும்போது அவற்றை எதிர்கொள்ள நிச்சயமாக அவர்களால் முடியாது.


இது தொடர்பாக அண்மையில் ஜேர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபணமாகியிருக்கின்றது.
இதோ அந்த ஆய்வில் வெளியான விடயங்கள் :


* சாதரணமாகத் தனது வீட்டில் அன்றாட வேலைகளைச் செய்யும் பெண், நாள் ஒன்றுக்கு 30 மைல் தூரம் வரை வீட்டுக்குள்ளேயே நடக்கிறாள். ஆனால் ஆண்கள் 5 மைல் தூரம் நடக்கும்போது, அந்த வேறுப்பாட்டை அவர்கள் உணர முடியும்.


* இன்பம் – துன்பம் இரண்டையும் ஒரே அளவில் தாங்கும் சக்தி பெண்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஆனால் ஆண்கள் இன்பம் என்றால் துள்ளிக் குதிப்பார்கள்.துன்பம் என்றதும் துவண்டு விடுவார்கள்.


* பிரசவ சமயத்தில் பெண்கள் படும் வேதனை… அப்பப்பா…. இதில் ஒரு துளியையாவது தாங்கிக் கொள்ளும் சக்தி ஆண்களுக்கு உள்ளதா என்றால்…? ஊஹூம்… அச்சமயம் பெண்களின் உடலிலிருந்து வெளியாகும் குருதியின் அளவு, ஓர் ஆணின் உடலிலிருந்து வெளியேறுமாயின், அவர் தனது உயிரையே இழக்க வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.


* கர்ப்பிணி பெண் ஒருவர் மாதாந்தம் வயிற்றில் உள்ள பிள்ளையின் நிறை அதிகரிக்க… அதிகரிக்க… சற்றும் மனம் கோணாமல் சகிப்புத் தன்மையுடன் அதை தாங்கிக் கொள்கின்றாள். அந்தக் குழந்தை இம்மண்ணில் பிறக்கும் வரை இந்தச் சகிப்புத் தன்மை தொடர்கின்றதல்லவா? ஆனால் ஆண் ஒருவருக்கு இவ்வாறான ஒரு சுமையைத் தாங்க முடியுமா? அப்படியே தாங்கினாலும் அவனுக்கு தனது வாழ்வின்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடுவது உறுதி.


ஜேர்மனியில் தெளிவுபடுத்தப்பட்ட விடயங்கள் இவைதாம்.


இதனால்தான் பெண்கள் ஒரு குதிரைக்கு சமமாகவும் ஆண்கள் சீட்டா என்ற மிருகத்திற்கு சமமாகவும் ஒப்பிடப்படுகின்றார்கள்.
காரணம் : சீட்டா தரையில் ஒரு மணித்தியாலயத்திற்கு 300 யார் மட்டுமே ஓடக்கூடியது. ஆனால் குதிரை அவ்வாறல்ல. சாதாரண வேகத்தில் சென்றாலும் 12-15 வரையிலான மைல் தூரம் அதனால் அதிவேகமாக ஓடமுடியும்; ஓடும். குதிரை நிற்காது ஓடக்கூடியது குதிரையின் மனம் நினைத்தால் மட்டும் அதன் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


இதைத்தான் ஆங்கிலத்தில் பெண்கள் ‘ Constant energy’ – ஆண்கள் ‘Brust of energy’ எனக் குறிப்பிடப்படுகிறது.ஒரு சிறு பிள்ளையின் தாயை எடுத்து கொண்டால், வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்து, பின்னர் அந்த சிறு பிள்ளையின் சுக துக்கத்தில் பங்கு கொண்டு, பிள்ளைகளுக்கு சுகவீனம் ஏற்படும் போதெல்லாம், தவித்துப் போய், மருந்து புகட்டி, இரவிரவாகக் கண் விழித்திருந்து பராமரிக்கின்றாள்.


மறுநாள் அதிகாலை விழித்தெழுந்து மீண்டும் வீட்டு வேலை மட்டுமன்றி அலுவலகம் செல்வதிலும் சுறுசுறுப்பாகி விடுகின்றாள். ஆனால் ஒரு ஆண் சாதாரணமாக 5 மணித்தியாளமாவது உறங்காவிட்டால், அவனால் எந்த வேலையையும் ஈடுபாட்டோடு ஒழுங்காகச் செய்ய முடியாது.


பழக்கவழக்கத்தை எடுத்து கொண்டால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுவதைக் காண முடியும்.
பாலியல் தொடர்பான விடயத்தில் கூட, பெண்களால் தம் மனதைக் கட்டுப்படுத்தி வாழ்ந்துவிட முடியும்(ஒரு சிலர் இதற்கு விதி விலக்கு). ஆனால் ஆண்களால் அவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தி வாழ முடியாது; வாழவும் மாட்டார்கள். இந்த விடயத்தில் கூட ஒரு ஆண் (Active Partner) ஆகச் கருதப்படுகிறார்.


பெண்களின் சிந்தனையில் எத்தனையோ விதமான மாற்றங்கள் உள்ளன. தனது பிள்ளைகள் மற்றும் கணவருக்காகப் பல தியாகங்களைச் செய்யும் – செய்யக்கூடிய மனப்பான்மை ஒரு பெண்ணுக்கு உண்டு.


ஒரு பிள்ளைக்குத் தாயானவள் தன் உதிரத்தையே பாலாக்கி ஊட்டுவது என்பது உலகில் உன்னதமானதாகவே கருதப்படுகின்றது. தாயானால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது செய்யும் ஒரு அரிய தியாகமே இது என்றால் கூட அது மிகையல்ல. பெண்ணானவள் எல்லாவிதத்திலும் உலகில் உயர்ந்தே நிற்கிறாள். இதனை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
‘அன்பு’ எனும் ஊற்று பெருக்கெடுக்கும் உன்னதமான ஓரிடம் என்றால் அது ஒரு தாயின் இதயம் மட்டுமே. பெண்களின் அன்புக்காக ஆண்கள் பல கோணங்களில் ஏங்கித் தவிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதே அன்புக்காக எதையும் செய்யத் தயாராகும் நிலையில் ஆண்கள்… என்றால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இவ்வாறெல்லாம் நாம் குறிப்பிட்டாலும் உலகில் விசித்திரமானது என்ன தெரியுமா? இத்தகைய பெண்களிலும் ஆண்களிலும் கூட விசித்திரமானவர்கள், வித்தியாசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதுதான்.ஆண்-பெண் என்ற இரு வேறுப்பட்ட கருத்துடையவர்கள் ஒன்றைணையும் போதுதான் ஒரு சமூதாயம் முழுமை பெறுகிறது.
ஓர் ஆண் ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாகவும், ஊக்கமளிப்பவராகவும் மட்டுமே இருக்க முடியும். கணவர் உழைக்கும் வேதனத்தைக் கொண்டு சிறந்த இல்லறத்தை நடத்துபவளே நல்லதொரு இல்லத்தரசியாகிறாள் ஒரு பெண். இரு மனங்கள் ஒன்றிணைந்த திருமண பந்தத்தைக்கூட சிறப்புடன் கட்டிக் காக்க வேண்டிய கடப்பாடு பெண்ணுக்கு உள்ளது.


மார்க்கிரட் தாட்சர், பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார கொள்கைகளைக் கண்டு முழு உலகமுமே வியந்து போனது.


முக்கியமான ஒரு விடயம் என்ன தெரியுமா? ஒரு பெண்ணின் சக்தி அந்தப் பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான். அந்தச் சக்தியை அவள் உணர்ந்து கொண்டால், அவள் தனது பிழைகளையும் திருத்திக் கொள்ளவும் குறைகளை நிறைகளாக்கவும் முடியும்.
ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் எதிர்பார்ப்பது ஆறுதல், சந்தோஷம், நிம்மதி ஆகியவற்றைத்தான். இவை அனைத்தும் மனைவி – தாய் என்ற இரு உன்னதமான உறவுகளில் தான் அவனுக்குக் கிடைக்கின்றன என்பதை அவன் மறந்துவிடக் கூடாது. அதனால் தான் ஒரு பெண் – தாய் அனைத்தையும் தாங்கும் ‘பூமி மாதா’ என அழைக்கப்படுகின்றாள். இதில் தவறேதும் இல்லையல்லவா?
முன்னாள் உயர் நீதிமன்றநீதிபதி செனவிரத்ன பண்டார ஒரு ஊடகவியலாளர் கருத்தரங்கில் தான் ஆராய்ந்த விடயங்கள் தொடர்பில் இவவாறு கூறியுள்ளார்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites