Tuesday, October 16, 2007

அக்கறை

விட்டிபூச்சிகளாய்
சின்ன சின்ன கனவுகள்
பட்டு படைத்துவிட்ட
எண்ணற்ற படைப்புகள்
படைப்புக்குள்ளே
ஒவ்வோரு உணர்வுகள்
கற்பனையும் அல்ல
அவை தான் என்றும் நிஜங்கள்
நிஜங்களை மறந்து நிழல்களில் வாழும் வாழ்க்கை
காணல் நீராய் என்றும் கலைத்திடும்
மறந்திவிட்ட ரணங்களான மனங்களின் குமுறல்கள்களுடன் புலம்பெயர் தமிழர்கள்

Wednesday, July 25, 2007

காற்றின் தேடல்

முகவரிகள் இன்றி
எல்லைகள் இன்றி
செல்கிறது காற்று
அதன் தேடல்கள்
இன்று நேற்றல்ல
பூமியின் ஆரம்பம் முதல்.....
என்னுள்ளேயும் தேடல்களை தூண்டி
என்னையும் தளுவி செல்கிறது
நானும் செல்கிறேன்
காற்றுடன் ஒரு தேடலாக!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites